சென்னை, கல்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வரும் அதிவேக ஈனுலை மின் நிலையத்தில், வரும் நவம்பரில் மின் உற்பத்தி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் தமிழகத்திற்கு, 250 மெகாவாட் வழங்க வலியு றுத்தப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு மாவட் டம், கல்பாக்கத்தில் மத் திய அரசின் அணு மின் நிலையம் உள்ளது. அங்கு தலா, 220 மெகாவாட் திறன் உடைய, இரு அணு உலைகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அதிலிருந்து தமிழகத்திற்கு தினமும், 330 மெகாவாட் ஒதுக்கப்பட்டுள்ளது. கல்பாக்கம் அணு மின் நிலையம் அருகில், அணுசக்தி துறையின் கீழ் செயல்படும், 'பாவினி' நிறுவனம், 500 மெகா வாட் திறனில், முன் மாதிரி அதிவேக ஈனுலை அமைத்து வருகிறது. இந்த மின் நிலையத்தில், நம் நாட்டில் அதிகம் கிடைக்கும் தோரியம் பயன்படுத்தப்பட உள்ளது. தற்போது, அதிவேக ஈனுலை மின் நிலையத்தின் அனைத்து பணிகளும் இறுதி கட்டத்தை எட்டிய நிலையில், வரும் நவம்பரில் உற்பத்தி தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய மின் நிறுவனங்கள் சார்பில், அனல் மின் நிலையம், அணு மின் நிலையம் அமைக்கப்படும்போது, அதன் மொத்த மின் உற்பத்தித் திறனில், 50 சதவீத மின்சாரம், சம்பந்தப்பட்ட மாநிலத்திற்கும், மீதி பிற மாநிலங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதன் அடிப்படை யில், அதிவேக ஈனுலை மின் நிலையத்தில் இருந்து, 50 சதவீத மின்சாரம் தமிழகத்திற்கு வழங்க, மின் வாரியம் வலியுறுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/kalpakkam-fast-breeder-reactor-work-reaches-final-stage-power-generation-to-start-in-november




