கொழும்பு, இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.இந்தியாவுக்கு இது 600-வது டெஸ்ட் போட்டியாகும். வரலாற்று சிறப்புமிக்க இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்று முத்திரை பதித்துள்ளது. இதே போல் தனது 300, 400, 500-வது டெஸ்டிலும் இந்தியா வெற்றி கண்டிருக்கிறது. மொத்தத்தில் இந்தியா இதுவரை 187-ல் வெற்றியும், 188-ல் தோல்வியும் கண்டுள்ளது. 224 போட்டிகள் 'டிரா' ஆனது. மற்றொரு டெஸ்ட் சமனில் முடிந்தது. இலங்கை மண்ணில் கடைசியாக 2015-ம் ஆண்டில் தோல்வி அடைந்த இந்தியா அதன் பிறகு தொடர்ச்சியாக 6 டெஸ்டுகளில் வெற்றிக்கனியை பறித்து இருக்கிறது. இதன் மூலம் இலங்கை மண்ணில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பெற்ற வெளிநாட்டு அணியான இங்கிலாந்தின் சாதனையை (6 வெற்றி) சமன் செய்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/cricket/victory-against-sri-lanka-indian-team-sets-a-record




