மதுரை, மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு தினசரி இயக்கப்படும் சேது எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஐ.சி.எப். ரெயில் பெட்டிக்கு பதிலாக எல்.எச்.பி. ரெயில் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. இந்த ரெயில் பெட்டிகள் இன்று (வியாழக்கிழமை) முதல் ராமேசுவரத்தில் இருந்தும் வருகிற 22-ந் தேதி முதல் சென்னையில் இருந்து இணைக்கப்படுகின்றன. இந்த ரெயிலுக்கு இணை ரெயிலாக இருக்கும் திருச்செந்தூர்-சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் (வ.எண்.20605/20606) ரெயிலில் சென்னையில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் எல்.எச்.பி. பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. அதனை தொடர்ந்து இந்த ரெயில்களில் ஒரு முதல் வகுப்பு குளிரூட்டப்பட்ட பெட்டி, 2 இரண்டடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 3 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள், ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான பொதுப்பெட்டி இணைக்கப்பட்டிருக்கும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/sethu-express-to-operate-with-new-coaches-from-today




