சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்திடம் விஜய்யின் 100 நாள் ஆட்சி எப்படி இருக்கிறது என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளிக்க மறுத்த ரஜினிகாந்த், ‘நன்றி’ என சொல்லிவிட்டு வேறு எதுவும் பதிலளிக்காமல் காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார். நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது. சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் இந்தப் படத்தை தொடர்ந்து அஸ்வந்த் மாரிமுத்து இயக்கும் ‘தர்மன்’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் நேற்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் பேட்டி எடுத்தனர். ரஜினிகாந்த் கொடுத்த ரியாக்ஷன் அப்போது அவர் கூறியதாவது: “ஜெயிலர் 2 படப்பிடிப்பு முடிந்து விட்டது. தர்மன் படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு வருகிறேன். தர்மன் படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார். ரெட் ஜெயன்ட் மூவிஸில் நாங்கள் இருவரும் இணைந்து நடிக்கிறோம்” என்றார். தொடர்ந்து, விஜய்யின் 100 நாள் ஆட்சி எப்படி இருக்கிறது என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளிக்க மறுத்த ரஜினிகாந்த், ‘நன்றி’ என சொல்லிவிட்டு வேறு எதுவும் பதிலளிக்காமல் காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/vijays-100-day-rule-rajinikanths-reaction




