மத்திய ரெயில்வே விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-புனே ரெயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரங்கள், தண்டவாள பராமரிப்பு பணி மற்றும் உயர்மின் அழுத்த கம்பி சீரமைக்கும் பணிகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக புனே ரெயில் நிலையத்தில் உள்ள 3, 4, 5 மற்றும் 6 ஆகிய பிளாட்பாரங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு இருக்கும்.எனவே புனே வழியாக இயக்கப்படும் சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டும், சில ரெயில்கள் தாமதமாகவும், மாற்று ரெயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டும் இயக்கப்பட உள்ளன. குறிப்பாக, மும்பை-புனே இடையே இயக்கப்படும் 6 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. ரெயில் சேவை மாற்றிமைப்பு இருப்பினும் மும்பை- சென்னை எக்ஸ்பிரஸ் (வண்டி எண்:- 22159) புனே ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு 40 நிமிடங்கள் தாமதமாக இயக்கப் படும். ஜெய்ப்பூர்- புனே எக்ஸ்பிரஸ் ரெயில் காட்கி ரெயில் நிலையத்து டன் நிறுத்தப்படும். நாக்பூர்- புனே, அமராவதி- புனே, ஜம்முதாவி- புனே எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஹடப்சர் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். லோனாவாலா- புனே பாசஞ்சர் ரெயில் சிவாஜிநகர் நிலையத்துடன் நிறுத்தப்படும். அதேபோல மறுமார்க்கத்தில் இயக்கப்படும் ரெயில்களின் புறப்படும் நிலையங்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, புனே- ஜெய்ப்பூர், புனே- மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் புனேக்கு பதிலாக காட்கி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும். புனே- நாக்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஹடப்சர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும். புனே-கோலாப்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சத்தாரா ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும். எனவே, பயணிகள் இந்த ரெயில் சேவை மாற்றங்களை முன்கூட்டியே அறிந்து, தங்களது பயண நேரத்தை திட்டமிட்டு மாற்றி அமைத்துக்கொள்ளுங்கள்.என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/mumbai-chennai-express-train-to-run-with-a-40-minute-delay-railway-announcement




