ஐ.ஐ.டி பாம்பேயில் பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் மாணவர் சாஹில் வாகோடே. இரண்டாம் ஆண்டு மிட் செமஸ்டர் தேர்வின்போது, ChatGPT பயன்படுத்தி தேர்வறையில் பேராசிரியரிடம் இவர் மாட்டியதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு, கடந்த மூன்று மாதங்களாக ஐ.ஐ.டி பாம்பேயில் சாஹிலுக்குப் பிரச்னையும் தொந்தரவும் தொடர்ந்துள்ளது. பேராசிரியர்கள் சாதி சார்ந்து சாஹிலைப் பேசியதாகவும், கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதில் மனமுடைந்து சாஹில் கடந்த 18-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். சாஹிலின் தற்கொலையை அடுத்து, ஐ.ஐ.டி பாம்பே மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். IIT Bombay'பணமா? ரூ.50, UPI பேமென்டா? ரூ.51' - எஸ்கேப் ரூட்டில் வியாபாரிகள்; MDR-ல் மாட்டும் கஸ்டமர்கள்? ஐ.ஐ.டி நிர்வாகம் என்ன சொன்னது? இந்தச் சம்பவம் குறித்து முதலில் பேசிய ஐ.ஐ.டி பாம்பே நிர்வாகம், “சாஹில் பிடிபட்டதும் அவருக்கு முதலில் கவுன்சலிங் வழங்கப்பட்டது. அப்போது இந்தச் சம்பவம் அவரது படிப்பைப் பாதிக்காது. அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று அறிவுரை கூறினோம்” என்று சொல்லியது. ஆனால், நிர்வாகத்தின் இந்தக் கூற்றை எதிர்த்து சாஹிலின் தந்தை போலீசில் புகார் அளித்தார். அந்தப் புகாரில் சாஹிலுக்கு மன அழுத்தம் தரப்பட்டதாகவும், சாதி குறித்து பேசியதாகவும், பொய் வழக்குகளில் உன்னைச் சிக்க வைப்போம் என்று பேராசிரியர்கள் மிரட்டியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அடுத்து செய்தது. சாஹிலின் தந்தை பேசும்போது, சாஹில் காப்பி அடித்து மாட்டவில்லை என்று கூறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவங்களில் ஷிரீஷ் கேதாரே மற்றும் சூரியநாராயண தூல்லா என்கிற இரண்டு பேராசிரியர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. இதையடுத்து, ஐ.ஐ.டி பாம்பே நிர்வாகம் தூல்லாவை டீன் பதவியில் இருந்து நீக்கியுள்ளது. ஆனால், தூல்லாவின் இந்தப் பணி நீக்கத்திற்குப் பல்வேறு பேராசிரியர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தூல்லா அறிவுறுத்தப்பட்ட வழிமுறைகளின்படி தான் சாஹிலுக்குத் தண்டனைக் கொடுத்துள்ளார் என்று தெரிவிக்கின்றன அவை. சாஹில் தந்தைஉக்ரைன் போர்: 'ரஷ்யாவுக்கு அனுப்பப்படும் வடகொரியத் தொழிலாளர்கள்' - இருநாடுகளுக்கும் என்ன பலன்? சாஹில் தந்தை பேச்சு இந்த நிலையில், நேற்று ANI-க்கு சாஹிலின் தந்தை ரவீந்திர வாகோடே பேட்டி அளித்துள்ளார். “சாஹில் திறமையான மாணவன். ஐ.ஐ.டி அட்வான்ஸ்ட் தேர்வில் தேர்ச்சி பெறுவது சாதாரண விஷயமல்ல.அவனுடைய அகில இந்திய தரவரிசையைப் பார்த்தாலே தெரியும். அவர்கள் அவன் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்துகின்றனர். அவன் ஆள்மாறாட்டம் செய்தான். காப்பி அடித்தான் என்று கூறுகிறார்கள். அது பொய். இந்தச் சம்பவத்திற்குக் காரணமான ஷிரீஷ் கேதாரே மற்றும் சூரியநாராயண தூல்லாவை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்பதே என் கோரிக்கை. அவன் பெரும் வேதனையில் இருந்தான். ‘கொஞ்சம் பொறுத்துக்கொள். இதற்குப் பிறகு உன் வாழ்க்கையே நன்றாக இருக்கும்’ என்று அவனிடம் பொறுமையாக இருக்கும்படி கூறினேன். அவனிடம் அப்படிச் சொன்னது நான் செய்த தவறு” என்று கூறியுள்ளார். ட்ரம்ப் போட்ட தடை; வெள்ளை மாளிகை கவரேஜைப் புறக்கணித்த US செய்தி நிறுவனங்கள் - என்ன நடந்தது? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/crime/sahil-wakode-death-father-alleges-caste-based-harassment




