சென்னை, தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏறுமுகம் கண்டு வருகிறது. அதிகரிக்கும் தங்கம் விலை கடந்த 14-ந்தேதி தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 200-க்கும், சவரன் ரூ. 1 லட்சத்து 13 ஆயிரத்து 600-க்கும் விற்பனையானது. இது படிப்படியாக அதிகரித்து நேற்று முன் தினம் மேலும் ரூ.250 அதிகரித்து கிராம் ரூ.14 ஆயிரத்து 850-க்கும், ரூ.2 ஆயிரம் அதிகரித்து சவரன் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 800-க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,950-க்கும், சவரனுக்கு ரூ.800 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,19,600-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், விடுமுறை தினமான இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை ஒரு கிராம் ரூ.14,950-க்கும், ஒரு சவரன் ரூ.1,19,600-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லாமல், நேற்றைய விலையிலேயே அதாவது ஒரு கிராம் ரூ.270-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/what-is-the-current-price-of-ornamental-gold-in-chennai-today




