சென்னை, தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்தாலும், பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் 5 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று அதிகமாக வெப்பநிலை பதிவான இடங்கள் வருமாறு:- திருச்சி - 103.1° பாரன்ஹீட் (39.5° செல்சியஸ்) மதுரை விமான நிலையம் - 102.92° பாரன்ஹீட் (39.4° செல்சியஸ்) ஈரோடு - 101.12° பாரன்ஹீட் (38.4° செல்சியஸ்) வேலூர் - 100.94° பாரன்ஹீட் (38.3° செல்சியஸ்) மதுரை நகர் - 100.76° பாரன்ஹீட் (38.2° செல்சியஸ்) முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/weather/heatwave-in-5-districts-of-tamil-nadu-today




