மங்களூரு, 'டாக்சிக்' படம் இன்று வெளியாவதை முன்னிட்டி நடிகர் யாஷ் மங்களூரு பெல்தங்கடியில் உள்ள தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். 'டாக்சிக்' பட ரிலீஸ் பிரபல நடிகர் யாஷ் நடித்துள்ள 'டாக்சிக்' படம் இன்று (புதன்கிழமை) உலகமெங்கும் வெளியாகிறது. இதனால் நடிகர் யாஷ் பட நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் நடந்த பட நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றிருந்தார். நேற்று அவர் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மங்களூருவுக்கு சென்ற யாஷ் பெல்தங்கடியில் உள்ள தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பூரண கும்ப மரியாதை மேலும் படம் வெற்றிபெற வேண்டி மஞ்சுநாதர் கோவிலில் அவர் விசேஷ பூஜைகள் செய்து வழிபட்டார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் தர்மஸ்தலா கோவில் தர்மாதிகாரி வீரேந்திர ஹெக்டேவையும் நடிகர் யாஷ் சந்தத்து பேசினார். ரசிகர்கள் கூட்ட நெரிசல் நடிகர் யாஷ் வந்த தகவலை அறிந்து அவரது ரசிகர்கள் தர்மஸ்தலா கோவில் முன்பு குவிந்தனர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. போலீசார் ரசிகர்கள் கூட் டத்தை கட்டுப்படுத்தினர். தான் நடித்த ஒவ்வொரு படமும் வெளியாவதற்கு முன்பு நடிகர் யாஷ், தர்மஸ்தலா கோவிலுக்கு செல்வது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/toxic-releasing-today-actor-yash-offers-prayers-at-dharmasthala-temple




