சென்னை, வேளாங்கண்ணி ஆலய திருவிழாவையொட்டி, தாம்பரம் - வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தாம்பரத்தில் இருந்து ஆகஸ்ட் 24, 31 மற்றும் செப்டம்பர் 7 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை) இரவு 11.50 மணிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 06037) மறுநாள் காலை 7.45 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், வேளாங்கண்ணியில் இருந்து ஆகஸ்ட் 26, செப்டம்பர் 2, 9 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) நள்ளிரவு 12.45 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (06038) அதேநாள் காலை 7.30 மணிக்கு தாம்பரத்தை வந்தடைகிறது. 21 அம்ரித் பாரத் ரெயில் பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் துறைமுகம், சிதம்பரம், மயிலாடுதுறை, திருநள்ளாறு, காரைக்கால், நாகூர், நாகப்பட்டினம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-tambaram-and-velankanni




