சென்னை, ரவி தேஜா நடிப்பில் உருவான ‘இருமுடி’ திரைப்படம் 4 நாட்களில் உலகளவில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டும் ‘இருமுடி’ தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ரவி தேஜா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘இருமுடி’. இப்படத்தை இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கியுள்ளார். வெளியானது முதலே இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதுடன், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வருகிறது. மாஸ் இமேஜை ஒதுக்கி வைத்த ரவி தேஜா தனது வழக்கமான மாஸ் ஹீரோ இமேஜை முழுமையாக ஒதுக்கி வைத்து, மாறுபட்ட கதாபாத்திரத்தில் ரவி தேஜா நடித்திருப்பது படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் இருந்த ரவி தேஜாவுக்கு, ‘இருமுடி’ திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்று தந்துள்ளது. படம் வெளியான வெறும் 4 நாட்களில் உலகளவில் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. புதிய சாதனை ரவி தேஜாவின் திரைப்பயணத்திலேயே மிக வேகமாக ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த திரைப்படம் என்ற பெருமையை ‘இருமுடி’ பெற்றுள்ளது. இப்படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/rs-100-crore-in-4-days-ravi-tejas-irumudi-is-a-box-office-sensation




