காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோவில் திருவிழாவில் நடந்த தகராறில் 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி பகுதியில் அம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதில் ஊர் மக்கள் கலந்து கொண்டனர். அப்போது, ஒலிபெருக்கியில் கானா பாட்டு போட வேண்டும் என வலியுறுத்தி சிலர் தகராறில் ஈடுபட்டனர். 2 பேர் படுகொலை இதில், தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டது. அப்போது, இரு தரப்பினர் இடையே பெரிய அளவில் மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில், 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று அவர்களுடைய உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அந்த் பகுதியில் வன்முறை பரவி விடாமல் தவிர்க்க, 200-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/kanchipuram-conflict-at-temple-festival-2-killed




