ஐதராபாத், “திருமணம் செய்து கொள்கிறேன்” என கூறி ஏமாற்றியதாக துல்கர் சல்மான் பட இயக்குனர் பவன் சாதினேனி மீது நடிகை புகார் அளித்திருக்கிறார். இந்த புகாரைத்தொடர்ந்து, பவன் சாதினேனியை போலீசார் கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்துள்ளனர். யூடியூபராக தொடங்கிய திரைப்பயணம் பலரை போலவே பவன் சாதினேனியும் தனது திரைப்பயணத்தை யூடியூபராகத் தொடங்கினார். ‘இன்டர்வியூ’, ‘லவ் பார்முலா 31’, ‘பேவர்ஸ்’ உள்ளிட்ட குறும்படங்கள் மூலம் கவனம் பெற்றார். மொத்தம் 10 குறும்படங்களை இயக்கிய அவர், கடந்த 2013-ம் ஆண்டு ‘பிரேமா இஷ்க் காதல்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகத் திரையுலகில் அறிமுகமானார். ஹர்ஷவர்தன் ரானே, ஹரீஷ் வர்மா, ஸ்ரீ விஷ்ணு, ரீது வர்மா, ஸ்ரீமுகி மற்றும் விதிகா ஷெரு உள்ளிட்டோர் நடித்த இப்படம், இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அடுத்தடுத்து வெப் சீரிஸ்கள் இதையடுத்து நாரா ரோகித் நடிப்பில் ‘சாவித்திரி’ திரைப்படத்தையும், ராஜேந்திர பிரசாத் நடிப்பில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற ‘சேனாபதி’ திரைப்படத்தையும் பவன் சாதினேனி இயக்கினார். திரைப்படங்கள் மட்டுமின்றி ‘பி.ஐ.எல்’, ‘ஈ-ஆபிஸ்’, ‘கமிட்மென்டல்’ மற்றும் ‘தயா’ உள்ளிட்ட வெப் சீரிஸ்களையும் இயக்கியுள்ளார். துல்கர் சல்மானுடன் அடுத்த படம் தற்போது மலையாள நடிகர் துல்கர் சல்மானை வைத்து ‘ஆகாசம்லோ ஒக தாரா’ என்ற திரைப்படத்தை பவன் சாதினேனி இயக்கி வருகிறார். இப்படத்தில் சாத்விகா வீரவல்லி, பூஜா ஹெக்டே மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். போலீசார் தீவிர விசாரணை இந்த சூழலில் பவன் சாதினேனி திடீரென கைது செய்யப்பட்டிருப்பது தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகை அளித்த புகார் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பான மேலும் பல தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/pavan-sadineni-tollywood-young-director-in-police-custody-what-happened




