சென்னை, பிரபாஸுடன் காபி டேட் செல்ல ஆசை என்று நடிகை திவி வைத்யா மனம் திறந்தது பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. திவி வைத்யா சிறிய கதாபாத்திரங்களில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கிய நடிகை திவி வைத்யா, பின்னர் ‘பிக் பாஸ் தெலுங்கு’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். சிரஞ்சீவி கொடுத்த வாய்ப்பு ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்தபோது, சிரஞ்சீவி தனது அடுத்த படத்தில் திவிக்கு வாய்ப்பு வழங்குவதாக உறுதியளித்திருந்தார். அதன்படி, சிரஞ்சீவி நடித்த ‘காட்பாதர்’ திரைப்படத்தில் திவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன்பிறகு திரைப்படங்களில் அதிகம் தோன்றாவிட்டாலும், தனியார் ஆல்பம் பாடல்கள் மூலம் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வந்தார். சமீபத்தில் கதாநாயகியாகவும் ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார். பிரபாஸின் தீவிர ரசிகை சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இயங்கி வரும் திவி, அளித்த பழைய பேட்டி ஒன்று தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில், ‘மிர்ச்சி’ திரைப்படத்தை பார்த்ததிலிருந்தே தான் பிரபாஸின் தீவிர ரசிகையாக மாறியதாக திவி தெரிவித்துள்ளார். மேலும், ‘பாகுபலி’ திரைப்படங்களைப் பார்த்த பிறகு பிரபாஸ் மீதான தனது மரியாதை பல மடங்கு அதிகரித்ததாகவும் அவர் கூறியுள்ளார். பிரபாஸுடன் காபி டேட் மேலும், இன்ஸ்டாகிராமில் பிரபாஸுக்கு தானே மெசேஜ் அனுப்பியதையும் திவி நினைவுகூர்ந்துள்ளார். பல ரசிகர்களை போலவே தானும் பிரபாஸை நேரில் சந்தித்து அவருடன் ஒரு காபி டேட் செல்ல விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். மனம்விட்டு பேச வேண்டும் பிரபாஸ் தனது வீட்டிற்கு வரும் விருந்தினர்களை மிகவும் அன்புடன் உபசரிப்பார் என்று தான் கேள்விப்பட்டுள்ளதாக கூறிய திவி, ஒரு கூல் காபியுடன் பிரபாஸுடன் அமர்ந்து மனம்விட்டு பேச வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் தெரிவித்துள்ளார். இந்த பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் மீண்டும் வைரலாகி வருவகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/im-crazy-about-that-hero-i-need-to-meet-him-at-least-once-the-beauty-who-spoke-her-mind




