சென்னை, ‘தி வான்’ பட டீசர் வெளியாகி உள்ளது. மாயக் காட்டுக்குள் சிக்கிக் கொள்ளும் சித்தார்த் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் தமன்னா பாட்டியா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தி வான்: போர்ஸ் ஆப் தி பாரஸ்ட்’. தீபக் மிஸ்ரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த பேன்டஸி புராண திரில்லர் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. 1 நிமிடம் 56 வினாடிகள் கொண்ட இந்த டீசர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. காட்டுக்குள் சென்றால் உயிருடன் திரும்ப முடியாதா? ஒரு மர்மமான காட்டை மையமாக வைத்து இப்படம் நகர்கிறது. டீசரின் தொடக்கத்தில், அந்தக் காட்டுக்குள் யாரும் செல்லக்கூடாது என்ற எச்சரிக்கை பலகை காட்டப்படுகிறது. மேலும், அந்த காட்டுக்குள் செல்பவர்கள் யாரும் உயிருடன் திரும்ப மாட்டார்கள் என்ற பின்னணிக் குரலும் இடம்பெறுகிறது. இருப்பினும், கதாநாயகன் ஏதோ ஒரு மர்ம சக்தியால் அந்த அடர்ந்த காட்டுக்குள் ஈர்க்கப்படுகிறார். அதன்பிறகு என்ன நடக்கும் என்பதே கதையின் முக்கிய அம்சமாக இருக்கும் என தெரிகிறது. முதல் முறையாக இணைந்த சித்தார்த் - தமன்னா சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் தமன்னா பாட்டியா இணைந்து நடிக்கும் முதல் திரைப்படம் இதுவாகும். இவர்களுடன் சுனில் குரோவர், மணீஷ் பால், ஸ்வேதா திவாரி, அனூப் சோனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாலாஜி மோஷன் பிக்சர்ஸ் வழங்கும் இப்படத்தை ஏக்தா கபூர், அருணாப் குமார் மற்றும் நீரஜ் கோத்தாரி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். ‘தி வான்: போர்ஸ் ஆப் தி பாரஸ்ட்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/the-vvaan-what-is-that-secret-in-the-forest-tamannaah-siddharths-the-vvaan-teaser-will-make-your-mouth-water




