இட்டாநகர், வடகிழக்கு மாநிலமான அருணாச்சலபிரதேசத்தில் கடந்த வாரம் முதல் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் அம்மாநிலத்தில் தவாங், லோயர் சப்ரன்சிரி, அப்பர் சப்ரன்சிரி உள்பட 28 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கனமழையால் 1.55 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 பேர் பலி இதனிடையே, கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், ஆங்காங்கே நிலச்சரிவு சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், அருணாச்சலபிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/heavy-rain-floods-in-arunachal-pradesh-12-dead




