தேவதானப்பட்டி, தேவதானப்பட்டி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி மற்றும் சிந்துவம்பட்டி பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்திருந்தனர். தற்போது இந்த பயிர்கள் அனைத்தும் நன்கு வளர்ந்து, அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளன. பன்றிகள் அட்டகாசம் இந்த நிலையில், நேற்று இரவு பயிர்கள் விளைந்துள்ள வயல்களுக்குள் காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக புகுந்துள்ளன. அவை அங்கிருந்த மக்காச்சோள செடிகளை கடித்து குதறி, மிதித்து நாசப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஏக்கர் கணக்கில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம் கடுமையாக சேதமடைந்துள்ளது. விவசாயிகள் வேதனை கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்த சூழலிலும் பல மாதங்களாக கடும் சிரமப்பட்டு மக்காச்சோளத்தை சாகுபடி செய்தோம். ஆனால், அறுவடைக்கு தயாரான நேரத்தில் பன்றிகள் புகுந்து அனைத்தையும் நாசம் செய்துவிட்டன. இதனால் பெரும் மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. கோரிக்கை இப்பகுதியில் தற்போது பன்றிகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மீதமுள்ள பயிர்களையாவது காப்பாற்ற முடியுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பன்றிகளால் சேதமடைந்த பயிர்களை நேரில் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/maize-crops-destroyed-by-wild-boars-in-devadanpatti-region




