திருவண்ணாமலை, திருவண்ணாமலையில் 28-ந்தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்வு கூட்டம் நடைபெறும். சிறப்பு குறைதீர்வு கூட்டம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி அவர்களின் தேவைகளை கேட்டறிந்து நிறைவேற்றும் வகையில் வருகிற 28-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் கலெக்டர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்வு கூட்டம் நடத்தப்பட உள்ளது. கூட்டத்தில் அனைத்து துறை அலு வலர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளி நபர்களும் அன்றைய தினம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்து உள்ள புதிய குறைதீர்வு கூட்ட அரங்கில் நடைபெறும் சிறப்பு குறை தீர்வு கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் வந்தனா கார்க் தெரிவித்து உள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/special-grievance-redressal-meeting-for-differently-abled-persons-to-be-held-in-tiruvannamalai-on-the-28th




