நெல்லூர், ஆந்திர மாநிலத்தில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, தந்தை பைக்கை ஒளித்து வைத்ததை அவரது 6 வயது மகனே போலீசாரிடம் காட்டி கொடுத்த சுவாரசியமான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வாகன தணிக்கை ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் அனந்தசாகரம் பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கை மற்றும் 'கார்டன் அண்ட் செர்ச்' சோதனையில் ஈடுபட்டிருந்தனர். போலீசார் வீடு வீடாக சென்று வாகனங்களின் ஆவணங்களை சரிபார்ப்பதை கண்ட சுரேஷ் என்ற நபர், ஆவணங்கள் ஏதும் இல்லாததால் பயந்துபோய் தனது மோட்டார் சைக்கிளை எடுத்து சென்று பக்கத்து தெருவில் ரகசியமாக ஒளித்து நிறுத்தினார். போலீசாரை அழைத்து சென்ற சிறுவன் இதனை கவனித்து கொண்டிருந்த சுரேஷின் 6 வயது மகன் மகேந்திரா, நேராக அங்கு நின்றிருந்த போலீசாரிடம் சென்றான். மழலை மாறாத குரலில், “போலீஸ் மாமா. உங்களை பார்த்ததும் எங்க அப்பா பயந்துபோய் பைக்கை பக்கத்து தெருவுல ஒளிச்சு வச்சுட்டாரு. வாங்க உங்களுக்கு காட்டுறேன்” என்று கூறி போலீசாரை அழைத்து சென்றான். பாராட்டு சிறுவன் காட்டிய இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த பைக்கை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். பைக் மற்றும் அதன் ஆவணங்களை ஆய்வு செய்த போலீசார், அனைத்தும் சரியாக இருந்ததால் சிறுவனை பாராட்டி சென்றனர். கள்ளமிராத நெஞ்சோடு தந்தை செய்த தவறை போலீசாரிடம் காட்டி கொடுத்த சிறுவனின் இந்த சுட்டித்தனம் அங்கிருந்தவர்களிடையே பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது. இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/father-hides-bike-son-shows-police-viral-video




