சேலம், சேலம் மாவட்டம் அம்மாபேட்டையில் பொதுமக்களிடம் டெபாசிட் மற்றும் பல்வேறு பயிற்சிகள் என்ற பெயரில் பணம் பெற்று சிலர் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ள நிறுவனத்தை சேர்ந்த நபர், சர்ச்சில் நடைபெற்ற ஜெபக்கூட்டம் ஒன்றில் பங்கேற்றுள்ளார். இதனை அறிந்த அப்பகுதி மக்கள், சம்பந்தப்பட்ட நபரை சர்ச்சுக்குள் புகுந்து முற்றுகையிட்டனர். இதனிடையே அந்த நபர் அங்கிருந்து வேகமாக புறப்பட்டுச் சென்ற நிலையில் ஆத்திரமடைந்த சிலர் சர்ச்சில் இருந்த நாற்காலிகளை உடைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் ரூ.100 கோடிக்கும் மேல் மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ள நிலையில், சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-person-facing-money-fraud-allegations-attends-prayer-meeting-public-storms-church-and-lays-siege




