சேலம், சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற ஆடித் திருவிழா ஊஞ்சல் உற்சவத்துடன் நிறைவு பெற்றது. சேலத்தின் பிரசித்தி பெற்ற கோட்டை பெரிய மாரியம்மன் கோவிலில் ஆடித் திருவிழா விமரிசையாக நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டின் ஆடித் திருவிழா கடந்த மாதம் 21-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. விழா நாட்களில் கம்பம் நடுதல், சக்தி அழைத்தல், பொங்கல் வைபவம், மாவிளக்கு எடுத்தல், உருளுதண்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஊஞ்சல் உற்சவம் விழாவின் முக்கிய நிகழ்வான கோட்டை பெரிய மாரியம்மன் தேரோட்டம் கடந்த 7-ந் தேதி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து அம்மனை தரிசித்தனர். 10ம் தேதி சத்தாபரண திருவீதி உலாவும், பால்குட ஊர்வலமும் நடந்தது ஆடித் திருவிழாவின் நிறைவு நிகழ்வாக நேற்று மாலை, கோட்டை பெரிய மாரியம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடத்தப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து இரவு 8 மணிக்கு விடையாற்றி உற்சவம் நடந்தது. இதில், அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பூஜைகள் நடத்தினர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/devotional/aadi-festival-concluded-salem-kottai-mariamman-unjal-utsavam




