சியாட்டில் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அமெரிக்க அணி தோற்று வெளியேறியதும், டிரம்ப் நடனம் ஆடி பெல்ஜியம் வீரர்கள் கலாய்த்த வீடியோ வைரலானது. சிவப்பு அட்டை உலகக்கோப்பை கால்பந்து தொடரில் போஸ்னியாவுக்கு எதிரான போட்டியின்போது அமெரிக்க வீரர் போலரின் பலோகன் சிவப்பு அட்டை எச்சரிக்கைக்குள்ளாகி பாதியில் வெளியேற்றப்பட்டார். விதிமுறைப்படி சிவப்பு அட்டை பெறும் வீரருக்கு அடுத்த ஆட்டத்தில் விளையாட தடை உண்டு. இதனால் பெல்ஜியத்துக்கு எதிரான இன்றைய 3-வது சுற்று போட்டியில் அவரால் விளையாட முடியாத நிலைமை ஏற்பட்டது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், சர்வதேச கால்பந்து சம்மேளன (பிபா) தலைவர் கியானி இன்பான்டினோவை அழைத்து பேசி, பலோகனுக்கு வழங்கப்பட்ட சிவப்பு அட்டை முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கேட்டு கொண்டார். இந்த முடிவை மோசமானது என்றும் வாதிட்டார். அவரது நெருக்கடியை தொடர்ந்து சிவப்பு அட்டை நடவடிக்கையை பிபா நிறுத்தி வைத்தது. டிரம்ப் நடனம் இதனால் பலோகன் இன்றைய ஆட்டத்தில் விளையாடினார். இதற்கு பெல்ஜியம் அணி தனது எதிர்ப்பை பதிவு செய்து இருந்தது. எனினும், அந்த அணியின் கோரிக்கையை பிபா நிராகரித்தது. இந்த நிலையில் போட்டியில் இருந்து அமெரிக்கா தோற்று வெளியேறியது. இதனை தொடர்ந்து அமெரிக்க அணி மற்றும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் டிரம்ப்பின் தலையீட்டை கிண்டல் செய்யும் வகையில், போட்டியில் 4-வது கோல் அடித்து அமெரிக்காவை காலிறுதியில் இருந்து வெளியேற்றியதும், பெல்ஜியம் வீரர்கள் களத்திலேயே ‘டிரம்ப் நடனம்’ ஆடினர். இதுபற்றிய வீடியோவும் வைரலாகி வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/football/america-leaves-in-shock-trump-dances-and-pranks-belgian-players-viral-video




