வாஷிங்டன், ஈரான் முன்வைத்த புதிய போர் நிறுத்த திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நிராகரித்ததற்கான காரணத்தை, ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் மைக் வால்ட்ஸ் தெரிவித்துள்ளார். ஈரான் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு முன்பாகவே பல்வேறு சலுகைகளை அமெரிக்காவிடம் கோரியதாக மைக் வால்ட்ஸ் கூறினார். குறிப்பாக, ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகையை நீக்குதல், பொருளாதாரத் தடைகளை தளர்த்துதல் மற்றும் பல பில்லியன் டாலர் மதிப்பிலான முடக்கப்பட்ட சொத்துகளை விடுவித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை ஈரான் முன்வைத்ததாக அவர் தெரிவித்தார். இதுகுறித்து செய்தி நிறுவனத்திடம் பேசிய வால்ட்ஸ் கூறியதாவது: பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்காகவே இத்தகைய கோரிக்கைகளை முன்வைத்தது ஏற்க முடியாதது என டிரம்ப் கருதினர். ஈரான் அளிக்கும் உறுதிமொழிகளை அமெரிக்கா நம்பவில்லை. சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட அனுபவத்துக்குப் பிறகு, டிரம்புக்கு ஈரான் மீது அதிக நம்பிக்கை இல்லை. அதேநேரத்தில், இந்த மோதலுக்கு இறுதியில் ஏதேனும் ஒரு உடன்பாடு மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் டிரம்ப் உறுதியாக உள்ளார். அதற்காக அனைத்து வாய்ப்புகளையும் அவர் திறந்துவைத்திருக்கிறார்” என்றார். ஈரானின் திட்டம் முன்னதாக, ஈரான் வெளியுறவு மந்திரி அப்பாஸ் அராக்சி, கடந்த வாரம் ஐ.நா.வில் இந்த புதிய போர் நிறுத்த திட்டத்தை அறிவித்தார். அதன்படி, ஈரானின் முடக்கப்பட்ட சொத்துகளை விடுவிக்க வேண்டும், ஈரானிய எண்ணெய் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும், மேலும் ஹோர்முஸ் நீரிணைப்பில் விதிக்கப்பட்டுள்ள அமெரிக்க கடற்படை முற்றுகையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என ஈரான் கோரியுள்ளது.இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால், 7 நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணைப்பை மீண்டும் திறந்து, வழக்கமான கடல் போக்குவரத்தை அனுமதிக்கத் தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்து இருந்தது. ஆனால், இதனை அமெரிக்கா நிராகரித்துவிட்டது. அமெரிக்காவின் நிராகரிப்புக்குப் பிறகு பேசிய அராக்சி, அமெரிக்க தூதர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் பழையவை என்றும், ஆதாரமற்றவை என்றும் கூறினார். அமெரிக்கா சில நடவடிக்கைகளை மேற்கொண்டால் ஹோர்முஸ் நீரிணைப்பை திறக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்குமா? ஈரானின் திட்டத்தை டிரம்ப் நிராகரித்துள்ள நிலையில், ஈரானுடன் பேச்சுவார்த்தை அடுத்த வாரம் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து டிரம்ப் கூறுகையில், ஈரான் ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார்கள். ஆனால், அது நான் விரும்பும் ஒப்பந்தம் அல்ல” என்றார். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மறைமுகப் பேச்சுவார்த்தைகள் இன்று தொடங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/world/us-diplomat-reveals-why-trump-rejected-irans-new-truce-plan




