சேலம், மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம். ஆனால், அந்த குறிப்பிட்ட காலக்கட்டத்தில் அணையின் நீர்மட்டம் 90 அடிக்கு குறையாமல் இருந்தால்தான் அது சாத்தியம். தற்போதைய சூழ்நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 78 அடிக்கும் குறைவாகவே இருக்கிறது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அணைக்கு வினாடிக்கு 97 கனஅடி நீர் வரும் நிலையில், வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. தென்மேற்கு பருவமழையும் போதிய அளவு கைகொடுக்காத நிலையில் மேட்டூர் அணை நீர்மட்டம் 78 அடிக்கும் கீழ் குறைந்து குட்டை போல் காட்சி அளிக்கிறது. இதனால்,டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இனி, கேரளா, கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தால், காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இருக்கும். குறுவை பொய்த்தாலும், சம்பா, தாளடி சாகுபடிக்கு நீர் திறந்துவிட வாய்ப்பாக அமையும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/mettur-dam-resembles-a-small-pond-farmers-concerned




