பெங்களூரு, பெங்களூரு அருகே சிக்கபானவாரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட குட்டேபசவேசுவரா லே-அவுட் பகுதியில் வசித்து வந்தவர் அபிநந்தன் (வயது 38). இவருக்கும். ஹரினி என்ற பெண்ணுக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. மேலும் தம்பதிக்கு யதுவீர் (4) என்ற மகன் இருந்தான். இதில் அபிநந்தன் எலெக்ட்ரானிக் சிட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். விசாரணை கடந்த 16-ந் தேதி கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறின் காரணமாக அபி நந்தன் தனது மகன் யதுவீருடன் தனி அறையில் படுத்திருந்தார். மறுநாள் காலையில் அபிநந்தனும், அவரது 4 வயது மகன் யதுவீரும் படுக்கையில் பிணமாக கிடந்தனர். அவர்கள் இருவரும் மர்மமான முறையில் இறந்ததாக கூறி சிக்கபானவாரா போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். போலீசார் அபிநந்தனின் மனைவியிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது ஹரினிக்கு, வினய் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அவர்களது பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதுகுறித்து அறிந்த அபிநந்தன், கள்ளக்காதலை கைவிடும்படி கண்டித்து மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 16-ந் தேதி இரவும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதையடுத்து அபிநந்தன். தனது மகன் யதுவீருடன் தனி அறையில் படுத்து தூங்கியுள்ளார். கொலை அப்போது தனது கள்ளக்காதலன் வினயை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ஹரினி பேசியுள்ளார். மேலும் நள்ளிரவில் தனது கள்ளக்காதலன் வினய்யை வீட்டுக்கு வரவழைத்துள்ளார். பின்னர் அவர்கள் 2 பேரும் சேர்ந்து, அபிநந்தனை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் 4 வயது சிறுவன் என்றும் பாராமல் யதுவீரை கழுத்தை நெரித்து கொலை செய்ததும், போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் ஹரினியை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த கள்ளக்காதலன் வினய்யை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவன் மற்றும் 4 வயது மகனை பெண் படுகொலை செய்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/woman-kills-husband-and-4-year-old-son-for-the-sake-of-an-illicit-affair-arrested-along-with-her-lover




