ஆம்ஸ்டெல்வின், 16-வது உலகக் கோப்பை ஆக்கி போட்டி பெல்ஜியம் (வாவ்ரே) மற்றும் நெதர்லாந்தில் (ஆம்ஸ்டெல்வின்) நடந்து வருகிறது. இதன் ஆண்கள் பிரிவில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ள முன்னாள் சாம்பியனான இந்திய அணி தனது 3-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான பாகிஸ்தானை நேற்று எதிர்கொண்டது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி தொடக்கத்தில் அடுத்தடுத்து 3 கோல்கள் அடித்து அமர்க்களப் படுத்தியது. அதாவது கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி 5-வது, 21-வது நிமிடங்களிலும், முன்கள வீரர் அபிஷேக் 11-வது நிமிடத்திலும் கோலடித்தனர். இதைத்தொடர்ந்து பதிலடி கொடுக்க தீவிரம் காட்டிய பாகிஸ்தான் 2 கோல் திருப்பி நெருக் கடி அளித்தது. அந்த அணி வீரர்கள் ஹனான் ஷகித் 22-வது நிமிடத்திலும், சுப்யான் கான் 24-வது நிமிடத்தில் கோல் போட்டனர். இதற்கிடையே இந்திய வீரர் அபிஷேக் (24-வது நிமி டம்) மீண்டும் கோலடித்தார். முதல் பாதியில் இந்தியா 4-2 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. அதே முன்னிலையை கடைசி வரை தக்க வைத்துக் கொண்டது. பிற்பாதியில் இந்திய வீரர் ஹர்திக் சிங்கும் (35-வது நிமிடம்) பாகிஸ்தான் வீரர் ஹனான் ஷகித் தும்(46-வது நிமிடம்) கோலடித்தனர். முடிவில் இந்தியா 5-3 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது. இந்தியா 2வது சுற்றுக்கு முன்னேறியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/hockey/hockey-world-cup-india-advances-to-the-second-round-after-defeating-pakistan




