சேலம், மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் டெல்டா பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் காய்ந்து வருகிறது. கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. விநாடிக்கு 13,538 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 2,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வரும் நீரின் அளவைவிட வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால், நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மேலும் மேட்டூர் அணை நீர்மட்டம் 87அடியை நெருங்கி உள்ளது. அணை நீர்மட்டம் நேற்று மாலை 86.83 அடியாக உள்ளது. தற்போதைய அளவில் நீர்வரத்து காணப்பட்டால், அணை நீர்மட்டம் அடுத்த சில நாட்களில் 90 அடியை எட்டி விடும். அதன்பிறகும் இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் சூழல் உருவாகலாம் என்று பொதுப்பணித்துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/water-level-nearing-90-feet-will-water-be-released-from-mettur-dam




