சென்னை, அரசுத் துறை, கல்வி நிறுவன நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை கட்டாயமாக்கும் வகையில், சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ் என்றால் கெத்து இந்தியாவின் நெற்றியில் வைக்கக்கூடிய வெற்றிப் பொட்டுதான் நம் தமிழ்நாடு. தமிழ் என்றால் கெத்து; தமிழ் என்றால் அது தனி பவர். ஒரு பெயரே, ஒரு சொல்லே மிகப்பெரிய வரலாறுன்னா அது தமிழ்தான். தமிழ் மொழி என்றால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒன்றாக வந்து நிற்கும். தமிழ் வெறும் மொழி மட்டும் அல்ல; நம் உயிர்; பேசினால் ஓசை மட்டும் இல்லை, உணர்வும் வரும்; நம் தாய்மொழி குறித்த உணர்வை புரியவைக்க தாய் மொழி, தமிழ் மொழி என்று சொல்வதே போதும். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிப்பதுதான் மாநில உரிமை. தமிழ்த்தாய் வாழ்த்தின் மரியாதையை பாதுகாப்பதில் தவெக அரசு சமரசம் செய்யாது. உணர்வோடு கலந்திருக்கக்கூடிய தமிழை பின்னுக்குத் தள்ளினால் எப்படி பொறுத்துக்கொள்வது?; தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலிடத்தில் இருக்க வேண்டும்; அது நம் உரிமை. தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என்று கூறுவது அரசியல் சார்ந்த விவாதமாக மாற வேண்டிய அவசியம் இல்லை. கட்சி வேறுபாடுகளை கடந்து ஒன்றிணைந்து அனைத்து உறுப்பினர்களும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கூறினார். திமுக ஆதரவு இதனையடுத்து முதல்-அமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்துக்கு திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. திமுக சார்பில் எம்.எல்.ஏ. கோவி.செழியன் பேசுகையில், “அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்ற தீர்மானத்துக்கு திமுக ஆதரவு தெரிவிக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடவேண்டும் என முதலில் அரசாணை வெளியிட்டவர் முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர். தமிழ்த்தாய் வாழ்த்தை கட்டாயம் பாட வேண்டும் என 2021 டிச. 17இல் அரசாணை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின். தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இயற்றியவரின் பெயரில் உள்ள பல்கலைகழகத்திலேயே 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்டது அடிக்கடி மாறுபடும் இந்த சூழலை மாற்றிட இதனை சட்டமாக மாற்ற வேண்டும் என்று கூறினார். அதிமுக ஆதரவு தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்ற தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “தமிழ்த்தாய் வாழ்த்து வெறும் பாடல் அல்ல. அது நம் பண்பாட்டின் அடையாளம். தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது யாருக்கும் எதிரானது அல்ல; தேசப்பற்றும் மொழிப்பற்றும் வேறு வேறானது அல்ல. அரசியலில் நமக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் தமிழ் என்று வரும்போது நாம் அனைவரும் ஒரே குரலில் ஒலிக்க வேண்டும்” என்று கூறினார். ஒருமனதாக நிறைவேற்றம் தொடர்ந்து முதல்-அமைச்சர் விஜய் முன்மொழிந்த தனித்தீர்மானத்திற்கு காங்கிரஸ், பாமக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், பாஜக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து தனித்தீர்மானம் அனைத்து கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் அதிகாரப்பூர்வமான அறிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/special-resolution-moved-by-chief-minister-vijay-passed-unanimously




