தஞ்சாவூர் அருகே உள்ள ஒரத்தநாடு போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் குற்றச் சம்பவங்களை கண்காணித்து, குற்றவாளிகளை விரைவாக கைது செய்வதற்காக, திருவோணம் போலீஸ் எஸ்.ஐ குமரவேல் தலைமையில் ஏட்டு தர்மலிங்கம், போலீஸார் ஜெகன், சின்னத்துரை ஆகிய நான்கு பேர் கொண்ட தனிப்படையை தஞ்சாவூர் எஸ்.பி சுந்தரவதனம் அமைத்திருந்தார். Police department இந்நிலையில், ஒரத்தநாடு மேலஉளூர் பகுதியில் சமீபத்தில் நடந்த திருட்டு வழக்கில் குற்றவாளியை பிடித்த எஸ்.ஐ குமரவேல் டீம், நகையை திருடிய குற்றவாளியால் அடகு வைக்கப்பட்டிருந்த நகைகளை மீட்டு, அவற்றை உரியவரிடம் ஒப்படைக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர், எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதை விசாரித்த எஸ்.பி சுந்தரவதனம், குமரவேல் தலைமையிலான தனிப்படையை கலைத்து உத்தரவிட்டார். மேலும், விசாரணையில், பல்வேறு வழக்குகளை குமரவேல் தலைமையிலான தனிப்படை முறையாக விசாரிக்காமல், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து, எஸ்.பி சுந்தரவதனம், எஸ்.ஐ., குமரவேல், ஏட்டு தர்மலிங்கம், போலீஸார் ஜெகன், சின்னத்துரை ஆகிய நான்கு பேரையும் தஞ்சாவூர் ஆயுதப்படை பிரிவுக்கு பணியிட மாற்றி நடவடிக்கை மேற்கொண்டார். இந்த சம்பவம் தஞ்சாவூர் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரத்தநாடு இதுகுறித்து விபரம் அறிந்த சிலரிடம் பேசினோம், ``ஒரத்தநாடு அருகே உள்ள மேலஉளூரில் உள்ள ஒரு வீட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்டது. மொத்தம் 20 பவுன் கொள்ளை போனதாக சொல்கிறார்கள். இதனை குரமவேல் தலைமையிலான தனிப்படை விசாரித்த நிலையில் நகையை திருடிய நபரை கைது செய்ததுடன் அவரிடமிருந்து 20 பவுன் நகையை பறிமுதல் செய்ததாக சொல்கிறார்கள். இந்த வழக்கின் எஃப்.ஐ.ஆரில் 4 பவுன் மட்டுமே காணாமல் போனதாக பதியப்பட்டுள்ளது என்கிறார்கள். இந்நிலையில், குமரவேல் டீம், 4 பவுன் மட்டுமே நீதிமன்றத்தின் மூலம் உரியவரிடம் ஒப்பதைத்தாக சொல்கிறார்கள். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர் இதுகுறித்து எஸ்.பி சுந்தரவதனத்திடம் புகார் அளித்துள்ளார். அதன் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றனர். ஆனால் குமரவேல் தரப்பு, இதில் நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்றும் தவறான தகவலை கிளப்பி விடுவதாகவும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/crime/action-taken-against-4-policemen-in-tanjore




