பாட்னா, ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனரான பிரசாந்த் கிஷோர் பா.ஜ.க. வேட்பாளரை பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்றார். பாஜனதா கோட்டை பாங்கிபூர் தொகுதியின் பாஜனதா எம்.எல்.ஏ நிதின் நபின் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து கடந்த ஜூலை 30 அன்று இங்கு பலத்த பாதுகாப்புடன் இடைத்தேர்தல் நடைபெற்றது. பிரசாந்த் கிஷோர் வெற்றி கடந்த 1995-ம் ஆண்டு முதல் பாஜனதா கட்சியின் அசைக்க முடியாத இரும்புக்கோட்டையாக விளங்கிய பாங்கிபூர் சட்டமன்ற தொகுதியில் ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனரான பிரசாந்த் கிஷோர் பா.ஜ.க. வேட்பாளரை பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாக்குகள் விவரம் மொத்தம் உள்ள 32 சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கைகள் தற்பொழுது நிறைவடைந்த நிலையில், பிரசாந்த் கிஷோர் 64151 வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்து உள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சியின் நீரஜ் குமார் சின்ஹா 44827 வாக்குகளுடன் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். பிரசாந்த் கிஷோர் இவரை விட19324 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆர்.ஜே.டி பீகாரின் பிரதான எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் வேட்பாளர் ரேகா குப்தா வெறும் 14273 வாக்குகளை மட்டுமே பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டர். பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக செயல்பட்டு வந்த பிரசாந்த் கிஷோர், முதன்முறையாக நேரடியாக தேர்தலில் களம் இறங்கிய முதல் தேர்தல் இதுவாகும். ஜன் சுராஜ் கடந்த 2025 பீகார் பொதுத்தேர்தலில் ஜன் சுராஜ் கட்சி ஒரு இடத்தை கூட வெல்ல முடியாமல் போன நிலையில், இந்த இடைத்தேர்தல் வெற்றி பிரஷாந்த் கிஷோருக்கு ஒரு மிகப்பெரிய அரசியல் திருப்புமுனையாகவும், பாஜனதாவுக்கு பலத்த அதிர்ச்சியாகவும் பார்க்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/bihar-byelection-prashant-kishor-wins




