ஸ்ரீஹரிகோட்டா, ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து முதல் தனியார் ராக்கெட் விக்ரம்-1 நாளை (சனிக்கிழமை) விண்ணில் ஏவப்படுகிறது' என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர். ‘விக்ரம்-1' ராக்கெட் தெலுங்கானா மாநிலம் தலைநகர் ஐதராபாத்தை சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் விக்ரம்-1 என்ற ராக்கெட்டை தயாரித்துள்ளது. இந்த ராக்கெட் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்திலிருந்து நாளை (சனிக்கிழமை) காலை 11.30 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. கிரகா ஸ்பேஸ், காஸ்மோசர்வ், டிகியூப்ட் மற்றும் ஸ்கைரூட்டின் 'ஸ்கோப் உள்ளிட்ட நிறுவனங்களின் தொழில்நுட்ப சோதனை சுமைகளை (Payloads) விக்ரம்-1 சுமந்து செல்கிறது. மேலும், காஸ்மோஸ் டயமண்ட்ஸ் நிறுவனத்தின் நினைவுப் பரிசு பொருட்களும் இதில் இடம் பெற்றுள்ளன. 3-டி அச்சிடப்பட்ட என்ஜின்கள் சுமார் 350 கிலோ எடையுள்ள சிறிய செயற்கைக்கோள்களை குறைந்த புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் வகையில் விக்ரம்-1 வடிவமைக்கப்பட்டு உள்ளது. முழுமையாக கார்பன் கலவைப் பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த மூன்று கட்ட ராக்கெட்டில் 3-டி அச்சிடப்பட்ட என்ஜின்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. முதல் சோதனைப் பயணத்தில் 450 கிலோமீட்டர் உயர சுற்றுப்பாதையை எட்டுவது இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/first-private-rocket-vikram-1-to-launch-from-sriharikota-tomorrow




