பெங்களூரு, உலகளவில் புகழ்பெற்ற ‘டைம் அவுட்’ நிறுவனம், ‘இன்ட்ரெபிட் டிராவல்’ அமைப்புடன் இணைந்து நடத்திய ஆய்வின் அடிப்படையில், 2026-ம் ஆண்டுக்கான ‘உலகின் சிறந்த 20 இரவுப்பொழுது நகரங்கள்’ பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் தொழில்நுட்பத் தலைநகரமான பெங்களூரு, 17-ம் இடம் பிடித்துள்ளது. பெங்களூரு பூங்கா நகரம், சிலிக்கான் பள்ளத்தாக்கு, தகவல் தொழில்நுட்ப நகரம் என அழைக்கப்படும் பெங்களூரு மாநகர் உலக அளவில் பிரசித்தி பெற்றது. இங்கு கன்னடர்கள் மட்டுமின்றி பல்வேறு மொழி, இனம், சமுதாய மக்கள் வசித்து வருகிறார்கள். மக்கள் தொகை 1 கோடியை தாண்டிவிட்டது. இதனால் தற்போது நெரிசல் மிகுந்த மாநகராக பெங்களூரு உருமாறி வருகிறது. இது ஒருபுறம் இருக்க பெங்களூரு தகவல் தொழில்நுட்பத் துறையில் முதலிடத்தில் இருந்தாலும் குப்பை பிரச்சினை, போக்குவரத்து பிரச்சினைகள் கரும் புள்ளியாக இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க இரவு நேர பொழுதுபோக்கிற்காக பப்புகள், கேளிக்கை விடுதிகள், வணிக வளாகங்கள், மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் என இரவு நேர விரும்பிகளுக்கு தீனி போடும் இடமாகவும் பெங்களூரு திகழ்கிறது. உலகின் சிறந்த இரவுப்பொழுது நகரம் உலகின் சிறந்த இரவுப்பொழுது நகரங்கள் பட்டியலில் நம்ம பெங்களூருவுக்கு 17-வது இடம் கிடைத்துள்ளது. உலகளவில் புகழ்பெற்ற 'டைம் அவுட்' என்ற நிறுவனம், இன்ட்ரெபிட் டிராவல் என்ற அமைப்புடன் இணைந்து நடத்திய ஆய்வின் அடிப்படையில், 2026-ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த 20 இரவுப்பொழுது நகரங்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தான் பெங்களூருவுக்கு 17-வது இடம் கிடைத்துள்ளது. சர்வதேச அளவில் உணவு மற்றும் கலாசாரத்துக்காக பெங்களூரு ஏற்கனவே 13-ம் இடம் பிடித்தது. இரவுப்பொழுது அமைப்புகளின் தரம், பாதுகாப்பு, மலிவு கட்டணம், சமூக கலாசாரம், பன்முகத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் உள்ளூர் மக்களிடம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு, சர்வதேச வல்லுனர்களின் மதிப்பீட்டின்படி இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. டெல்லி, மும்பைக்கு இடமில்லை இதில் பாரம்பரிய நடனக்கூடங்கள் (நைட் கிளப்) தாண்டி நேரலை இசை நிகழ்ச்சிகள், நகைச்சுவை மன்றங்கள், கிராப்ட் பியர் விடுதிகள், கலை நய மிக்க காக்டெய்ல் பார்கள், பப் கபேக்கள் அடிப்படையில் பெங்களூருவுக்கு 17-வது இடம் பிடித்துள்ளது. அதே நேரம் நாட்டின் தலைநகரான டெல்லி, வர்த்தக நகரமான மும்பை ஆகியவை இந்த பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் தாய்லாந்து தலைநகர் பாங்காக் முதலிடத்திலும், ஜெர்மனியின் பெர்லின் 2-வது இடத்தையும், அமெரிக்காவின் நியூயார்க் 3-ம் இடத்தையும் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், பிரேசிலின் சர்பாலோ ஆகிய நகரங்கள் முறையே 4-வது மற்றும் 5-வது இடத்தை பிடித்துள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/list-of-the-worlds-best-cities-for-nightlife-which-indian-city-surpassed-mumbai-and-delhi



