சென்னை வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது என வானிலை மையம் தெரிவித்து உள்ளது. வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதுபற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று காலை வெளியிட்ட செய்திக்குறிப்பில், வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. 48 மணி நேரம் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 22-ந்தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்று, வடக்கு ஆந்திரம் தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் புயலுக்கு முந்தைய நிலைக்கு வலுவடையும் என கணிக்கப்பட்டு உள்ளது. கரையை கடக்கும் வரும் 24-ந்தேதி அதிகாலை வடக்கு ஆந்திர பிரதேசம் - தெற்கு ஒடிசா கடற்கரை பகுதியில், விசாகப்பட்டினம் - கோபால்பூர் இடையே கரையை கடக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்து உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/weather/low-pressure-area-in-bay-of-bengal-intensifies-into-depression




