சவுத்தாம்டன், இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. பின்னர் நடைபெற்ற 3 ஆட்டங்களிலும் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றிபெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது. டாஸ் தாமதம் இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. சவுத்தம்டன் நகரில் இன்று நடைபெறும் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் காரணமாக போட்டி நடைபெறும் மைதானத்திற்கு இந்திய அணி வீரர்கள் வருவதற்கு தாமதம் ஆனது. இதனால் டாஸ் தாமதமாகியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/cricket/england-vs-india-toss-delayed




