வேலூர், அமிர்தியில் மலையேற்றம் செல்லும் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மலையேற்றம் மலைப்பகுதியில் நடைபயணம் என்பது வெறும் உடல் உழைப்பு சார்ந்த நடைபயணம் மட்டுமல்ல. எந்திரத்தனமான உலகில் இருந்து விடுபட்டு இயற்கையுடன் நம்மை இணைத்துக் கொள்ளும் அரிய வாய்ப்பாகும். இந்த மலை நடைபயணம் பொறுமையையும், இயற்கையை பேண வேண்டிய அவசியத்தையும் கற்றுக்கொடுக்கிறது. ஏராளமானவர்கள் மலை யேற்றம் மேற்கொள்கின்றனர். இந்த நிலையில் மலையேற்றம் (டிரெக்கிங்) செல்பவர்களுக்காக வேலூர் மாவட்டத்தில் வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டிரெக் தமிழ்நாடு எனும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள காப்புக்காடுகள் அல்லது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்குள் வனத்துறை சார்பில் முறையான அனுமதி பெற்று மலைப்பயணம் செய்யும் திட்டம் அரசு சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கலாம் வேலூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட அமிர்தி வனசரகத்தில் டிரெக்கிங் மேற்கொள்ள அடுத்த மாதம் 1-ந்தேதி இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- ”அமிர்தி மலையில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக அமிர்தி கோட்டாறு நீர்வீழ்ச்சி பாதையில் 4 கிலோ மீட்டர் தூரமும், அமிர்தி பெருமாள் கோவில் பாதையில் 2 கிலோ மீட்டர் தூரமும் ஆகிய 2 மலையேற்ற பாதைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதற்காக 2 வழிகாட்டிகளுக்கு மலையேற்ற பாதை விதிமுறைகள், மலையேற்றத்திற்கு வருவதற்கான முதலுதவி பயிற்சிகள் மற்றும் இயற்கை சார்ந்த விழிப்புணர்வு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. வருகிற 1-ந்தேதி முதல் இணையதளத்தில் முன் பதிவு செய்து 'டிரெக்கிங்' மேற்கொள்ளலாம். இதற்கு கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கிழக்கு தொடர்ச்சி மலை வியூ பாயிண்ட்கள், மலைவாழ் பழங்குடியினர் கிராமம், பழங்குடியினரின் கோவில், அமிர்தி கோட்டாறு நீர்வீழ்ச்சி ஆகியவற்றை சுற்றுலா பயணிகள் நேரில் கண்டு ரசிக்கலாம். இந்த மலை நடைபயணம் குறித்து சில நாட்களாக ஒத்திகை நடைபெற்றது.” என்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/vellore-trekking-is-now-available-at-amirthi-forest-department-announcement




