புதுடில்லி, வரலாற்றிலேயே முதன்முறையாக என்.சி.இ.ஆர்.டி.,யின் ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் தனிநபர் வருமான வரி தொடர்பான பாடம் சேர்க்கப் பட்டு உள்ளது. என்.சி.இ.ஆர்.டி. எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் மத்திய, மாநில பாடத்திட்டங்களை வடிவமைத்து பாடால்களை அச்சிட்டு வருகிறது. சமீபத்தில், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான சமூக அறிவியல் பாடத்திட்டத்தை என்.சி.இ.ஆர்.டி., வெளியிட்டது. அதில் 'அண்டர்ஸ்டாண்டிங் சொசைட்டி: இந்தியா அண்டு பியாண்ட் பார்ட் 2' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட பாடத்திட்டத்தில் வரலாற்றிலேயே முதன்முறையாக தனிநபர் வருமான வரி குறித்த பாடம் இடம்பெற்றுள்ளது. 'உங்கள் தனிப்பட்ட நிதியை நிர்வகித்தல்' என்ற தலைப்பின் கீழ் சேர்க்கப்பட்டுள்ள பாடத்தில் தற்போது நடைமுறையில் உள்ள புதிய வருமான வரி விதிப்பு முறை பற்றி விளக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், புதிய வரி வரம்புகள் கொடுக்கப்பட்டு, வரியை கணக்கிடும் வழிமுறைகளும் விளக்கப்பட்டுள்ளன. மக்கள் செலுத்தும் வரிப்பணம் நாட்டின் வளர்ச்சிக்கும், உட்கட்டமைப்புக்கும் எவ்வாறு பயன்படுகிறது என்பதும் விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது. வருமான வரியை நேர்மையாகவும், சரியான நேரத்திலும் செலுத்துவது ஒவ்வொரு குடிமகனின் முக்கிய பொறுப்பு என்ற விழிப்புணர்வை மாணவர்கள் இடையே விதைக்கும் வகையில் இந்த பாடம் வடிவ மைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/income-tax-lesson-in-the-9th-standard-social-science-textbook



