புதுடெல்லி, 30-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லி யில் நடந்து வருகிறது. 2-வது நாளான நேற்று பெண்கள் ஒற்றையரில் இந்திய 'இளம் புயல்' உன்னதி ஹூடா 22-20, 21-16 என்ற நேர் செட்டில் தெட் ஹிதர் துஜாரை (மியான்மர்) வீழ்த்தினார். 2-வது சுற்றில் உன்னதி கனடாவின் மிட்செல் லீயை சந்திக்கிறார். பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி 2-வது சுற்றில் 21-15. 21-12 என்று நேர் செட்டில் அமெரிக்காவின் லாரென் லாம் - அலிசன் லீ இணையை தோற்கடித்து காலிறுதிக்கு முந்தைய 3-வது சுற்றை எட்டியது. அதேசமயம் கவிபிரியா செல்வம்- சிம்ரன் சிங், கலப்பு இரட்டையரில் அஷித் சூர்யா- அம்ருதா, கேத் ருத்விகா- ரோகன் கபூர் ஆகிய இந்திய ஜோடிகள் தோற்று வெளியேறின. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/othersports/world-badminton-championships-indian-player-wins




