'இந்து ராஷ்டிரா' என்ற கருத்தைக் கண்டு யாரும் பயப்படத் தேவையில்லை என்றும், இந்தியாவில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார். "நம் அனைவரின் மூதாதையர்களும் ஒன்றே" என்று அவர் கூறிய கருத்து, தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. யோகா முகாம்கள் மற்றும் ஆயுர்வேதப் பொருள்கள் மூலம் பெரும் வர்த்தக சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ள பாபா ராம்தேவ், தனது சமீபத்திய பேச்சில், "ஹரித்வாருக்கு அருகில் தியோபந்த் உள்ளது. 2009-ல் அங்கு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது நான் அவர்களிடம், 'நம் மதங்கள் வேறுபடலாம், ஆனால் நம் மூதாதையர்கள் ஒன்றே. இந்து ராஷ்டிரா என்ற கருத்தைக் கண்டு யாரும் பயப்படத் தேவையில்லை. நம் அனைவரின் மூதாதையர்களும் சனாதன இந்து ஆரிய-வேத மரபைச் சேர்ந்தவர்கள்' என்று கூறினேன்" என உத்தரப் பிரதேசத்தில் உள்ள இஸ்லாமிய மதக் கல்வி நிறுவனத்திற்குச் சென்றதை நினைவு கூர்ந்தார். Baba Ramdev - பாபா ராம்தேவ் மேலும் சிறுபான்மை சமூகத்தினருக்கு அறிவுரை வழங்கும் விதமாக, "இந்து ராஷ்டிரா அமைந்தால் முஸ்லிம்கள் எங்கே போவார்கள் என்று சிலர் கேட்கிறார்கள். உங்கள் மூதாதையர்களின் பாரம்பர்யத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் தாடி வைத்துக் கொள்ளலாம் அல்லது மழித்துக் கொள்ளலாம்; விருப்பமான ஆடையை அணியலாம், ஆனால் உங்கள் மூதாதையர்களின் குணத்தைப் பின்பற்றுங்கள். இந்துஸ்தானில் முஸ்லிம்களுக்கோ, கிறிஸ்தவர்களுக்கோ எந்த ஆபத்தும் இல்லை" என்று அவர் குறிப்பிட்டார். ராம்தேவின் இந்தக் கருத்துகளுக்கு உடனடியாகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித், "அனைவரும் சனாதனிகள் என்றால், ஏன் இத்தனை பிரிவினைகளை உருவாக்க முயற்சிகள் நடக்கின்றன? இந்து ராஷ்டிரா பற்றிப் பேசுபவர்களிடம் கேளுங்கள். பாபா ராம்தேவிடம் கேளுங்கள். அவர் என்ன நோக்கத்தில் இதைக் கூறுகிறார் என்று எனக்கு எப்படித் தெரியும்? அனைவரும் சனாதனிகள் என்றால் பிரிவினைகளை உருவாக்கும் முயற்சிகள் ஏன்?" என்று கேள்வி எழுப்பினார். அசாதுதீன் ஓவைசி (AIMIM) கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் வாரிஸ் பதான், "இந்த நாடு அரசியலமைப்புச் சட்டத்தின்படியே இயங்குகிறது; அது அப்படித்தான் தொடரும். இது இந்து ராஷ்டிராவாகிவிட்டது என்று உங்களிடம் யார் சொன்னது? நமது நாடு இந்து தேசமாக அறிவிக்கப்பட்டுவிட்டதா என பிரதமரிடம் கேட்க விரும்புகிறேன். ஒரு முஸ்லிம் யாருக்கும் அஞ்சமாட்டான். நாங்கள் சட்டத்திற்கு உட்பட்டு, அரசியலமைப்புச் சட்டத்தின் கட்டமைப்பிற்குள் எங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துகிறோம். அரசியலமைப்பை மதியுங்கள். இதுபோல வெறுப்பைப் பரப்புவதை நிறுத்துங்கள்" என்று கடுமையாகச் சாடினார். அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சித் தலைவர் ஃபக்ருல் ஹசன் சாந்த், "நாட்டின் முக்கியப் பிரச்னைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் தந்திரத்தின் ஒரு பகுதியே ராம்தேவின் பேச்சு. பாஜக இது போன்ற விவாதங்களை வேண்டுமென்றே ஊக்குவித்து, தங்களின் பொறுப்புகளிலிருந்து தப்பிக்கப் பார்க்கிறது" என்று குற்றம் சாட்டினார். அசாதுதீன் ஒவைசி சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் நசீம் சித்திக், "இந்தக் கருத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தியா ஓர் இந்து தேசம் அல்ல; அனைத்து மதங்களுக்கும் சம மரியாதை என்ற கொள்கையின் அடிப்படையில் அமைந்த ஒரு மதச்சார்பற்ற நாடு. இத்தகைய பேச்சுகள் நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன" என்று குறிப்பிட்டார். மே வங்கம்: `திரிணாமுல் தலைவர்கள்மீது முட்டை வீச வேண்டுமென்பது அரசு உத்தரவு'- பாஜக கவுன்சிலர் சர்ச்சை முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/baba-ramdev-comment-no-need-to-fear-about-hindurashtra




