சென்னை, தொடர்ந்து 7 -வது ஆண்டாக இந்தியாவின் பொருளாதாரப் புரட்சியை வழி நடத்தும் பிரதமர் மோடி என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- பொருளாதாரப் புரட்சி நவீன பாரதத்தின் ஒப்பற்ற சிற்பியாகத் திகழும் பிரதமர் மோடி, நிலைகுலைந்து கிடந்த இந்தியப் பொருளாதாரத்தை அசைக்க முடியாத இரும்புக் கோட்டையாக மாற்றியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) புள்ளிவிவரங்கள் அதற்கு சான்றளிக்கின்றன. உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பெரும் பொருளாதாரமாக தொடர்ந்து 7 -வது முறையாக இந்தியாவை அரியணையில் ஏற்றி, சுதந்திர இந்தியாவின் முந்தைய பல பிரதமர்கள் எட்ட முடியாத சாதனையை, தனது நிர்வாகத் திறமையால் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் பிரதமர் மோடி. முந்தைய ஆட்சிகளில் 'சுழியம்' எனத் தேங்கிக்கிடந்த வளர்ச்சி, இன்று பிரதமர் மோடி ஆட்சியில் 'சிகரம்' தொட்டிருக்கிறது. வரும் 2031-ஆம் ஆண்டு வரை இந்தியாவின் இந்த அபரிமிதமான வளர்ச்சி தடையின்றித் தொடரும் என்ற IMF-ன் கணிப்பு, பிரதமர் மோடி தலைமையில் 'வளர்ச்சியடைந்த பாரதம்' எனும் இலக்கை நாம் மிக விரைவில் எட்டுவோம் என்பதை உறுதிப்படுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/pm-modi-leads-indias-economic-growth-for-7th-year-nainar-nagendran



