கோபி நயினார் இயக்கத்தில் உருவாகும் ‘காலனி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ‘அறம்’ படம் மூலம் கவனம் ஈர்த்த கோபி நயினார் விஜய் நடித்த ‘கத்தி’ படத்தின் கதை தன்னுடையது என்று கூறி போராடியவர் கோபி நயினார். அதன் பிறகு நயன்தாரா நடித்த ‘அறம்’ படம் மூலம் கவனம் ஈர்த்தார். முதல் படமே அட்டகாசமாக இருந்ததால் கோபி நயினார் நம்பிக்கைக்குரிய இயக்குநர் என்ற பெயரையும் பெற்றார். இவர் அடுத்ததாக ‘கருப்பர் நகரம்’ என்கிற படத்தை இயக்கும் பணிகளை மேற்கொண்ட நிலையில் அப்படம் கைவிடப்பட்டது. இயக்குநர் வெற்றி மாறன் தயாரிப்பில் ஆண்ட்ரியா நடித்த ‘மனுஷி’ என்கிற படத்தை இயக்கினார். அரசியல், பெண்ணிய சிந்தனை கொண்ட படமான இது தணிக்கை வாரியத்தில் சமர்பிக்கப்பட்டு, சென்சார் சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதால் இன்னும் வெளியாகாமல் உள்ளது. ‘காலனி’ திரைப்படம் கோபி நயினார் இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘காலனி’. ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் அஞ்சலி நாயர், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவா இசையமைக்கிறார். அதிதி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெற்றி மாறனும், மோஷன் வீடியோவை விஜய் சேதுபதியும் சமீபத்தில் வெளியிட்டனர். படத்தின் படப்பிடிப்பு நிறைவு இந்த நிலையில், ‘காலனி’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படம் இந்தாண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ️Shoot Wrapped. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/gopi-nainars-colony-film-shoot-wrapped-up




