திருவண்ணாமலை, திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள புகழ்பெற்ற இடுக்கு பிள்ளையார் கோவில் குகைப்பாதையில், நேற்று முன் தினம் ஆந்திர வாலிபர் ஒருவர் உடல் பருமன் காரணமாக சிக்கி, மூச்சுத்திணறலால் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சோகம் மறைவதற்குள், நேற்று அதே இடத்தில் ஆந்திராவை சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வணங்கி செல்கின்றனர் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இடுக்கு பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சிறிய குகை போன்ற அமைப்பில் 3 வாசல்கள் உள்ளன. பின் வாசல் வழியாக ஒருக்களித்து படுத்தவாறு உள்ளே நுழைந்து, மெல்லமாக கைகளை ஊன்றியவாறு நகர்ந்து முன் வாசல் வழியாக வெளியே வரவேண்டும். குகை போன்ற பகுதியில் இருந்து வெளியே வந்த உடன் நந்தி இருக்கும். பக்தர்கள் நந்தி பகவானையும், இடுக்கு பிள்ளையாரையும் வணங்கி செல்கின்றனர். இடுக்கு பிள்ளையார் கோவில் கடந்த 24-ந் தேதி நள்ளிரவில் ஆந்திராவை சேர்ந்த மணிக்குமார் 36 வயது) என்பவர் தனது குடும்பத்துடன் கிரிவலம் சென்றார். இடுக்கு பிள்ளையார் கோவிலுக்கு வந்த மணிக்குமார், குகை வடிவத்தில் உள்ள கோவில் பகுதியில் படுத்தபடி நுழைந்தார். மூச்சுத்திணறல் குகையில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்த அவர், மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினார். இதனை கண்ட சக பக்தர்கள் போராடி அவரை வெளியே கொண்டு வந்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மணிக்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பெண் பக்தர் சிக்கினார் இந்த நிலையில் நேற்று, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவர், திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் கிரிவலப் பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோவிலுக்குள் சென்று, அங்கிருக்கும் குறுகிய குகைப்பாதை வழியாக நுழைந்து சாமி தரிசனம் செய்ய முயன்றார். ஆனால், எதிர்பாராதவிதமாக அவரது உடல் பருமன் காரணமாக அந்த குறுகிய இடுக்கிற்குள் அவர் மாட்டிக்கொண்டார். அவரை அங்கிருந்தவர்கள் கையை பிடித்து இழுத்து வெளியே கொண்டு வந்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruvannamalai-idukku-pillaiyar-kovil-cave-path-again-woman-trapped




