மதுரை, மதுரையில் வீ த லீடர்ஸ் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:- “ஜூன் 5-ம் தேதி ஆரம்பித்து 15-வது நாளில் 20 லட்சம் உறுப்பினர்களை வீ த லீடர்ஸ் அமைப்பு நடவு செய்துள்ளது. தமிழகத்தில் 5 கோடி 60 லட்சம் பேர் வாக்காளர்களாக உள்ளனர். ஒன்றரை கோடிக்கு மேல் மக்கள் எந்த கட்சியிலும் அடிப்படை உறுப்பினராக இல்லை. தமிழகத்தில் இருக்கிற அரசியல் குப்பைகளை அள்ளிதான் ஆக வேண்டும் அதற்கான காலம் வந்து கொண்டிருக்கிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் மொழியையும் பாரம்பரியத்தையும் காப்பாற்ற வேண்டும். நாம் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரும்போது இந்து சமய அறநிலையத்துறை எனும் அமைப்பை எடுப்போம். உதாரணத்திற்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த கும்பாபிஷேகம் நிகழ்வைப் பற்றி சொல்லலாம். தவெக அரசு சினிமாவில் ப்ளாக் டிக்கெட் விற்பது போல, கும்பாபிஷேக டிக்கெட்டுகளை விற்றார்கள். தான் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்பதை சட்டமன்றத்தில் சபாநாயகர் முதல் ஒவ்வொரு உறுப்பினர்களும் காண்பித்துக் கொள்கிறார்கள். சட்டமன்றத்தில் பேசக்கூடிய விசயமா அது, இங்கு எல்லா மதமும் சமம் தான். பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையையும், பிராமண துவேஷத்தையும் நான் ஏற்கமாட்டேன்; பெரியாரின் பெண் இன விடுதலை, சாதி ஒழிப்பை ஏற்கிறேன். முதலீட்டை ஈர்க்க வெளிநாடுகளுக்கு செல்வது பழைய காலத்து அரசியல். லண்டன்லேயே பொருளாதாரம் இல்ல, அவன் எப்படி நம்மகிட்ட போடுவான்? இந்திய நிறுவனங்கள் தான் இங்கிலாந்தில் முதலீடு செய்கின்றன. இந்தியாவில் தொழிலதிபர்களிடம் பேசி முதலீட்டை ஈர்க்கலாம். உள்ளூர் தொழிலதிபர்களே தயாரா இருக்காங்க. முதல்-அமைச்சர் லண்டனுக்கே போயிருக்க வேண்டாம். முதல்-அமைச்சர் இங்கு இருக்கக்கூடிய நிறுவனங்களை அணுக வேண்டும். உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்த முதல்-அமைச்சர் முயற்சி எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-political-filth-in-tamil-nadu-must-be-cleared-away-annamalai




