கரூர், தமிழக வெற்றி கழக எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கில் ரூ. 3 கோடிக்கு மேல் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த குதிரை பேர வழக்கில் கரூரில் உள்ள கனகராஜ் என்பவருக்கு சொந்தமான நிதி நிறுவனத்திற்கும் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து நேற்று இரவு கரூர் ஆண்டாங்கோவில் ரோடு பாரி நகரில் உள்ள கனகராஜ் என்பவருக்கு சொந்தமான நிதி நிறுவனத்தில் கரூர் டவுன் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது நிதி நிறுவனத்தில் இருந்த ஆவணங்கள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. ஆனால் சோதனையில் குதிரை பேரம் தொடர்பான ஆவணங்கள் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நிதி நிறுவனத்திற்கு கரூர் டவுன் போலீசார் சீல் வைத்தனர். தொடர்ந்து குதிரை பேர வழக்கில் நிதி நிறுவனத்திற்கு போலீசார் சீல் வைத்த சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/tamilnadu-election-2026-webstories/case-regarding-attempts-to-poach-tvk-mlas-midnight-raid-at-a-financial-firm-in-karur




