மும்பை, மஹாராஷ்டிராவில் ரெயிலில் முன்பதிவு பெட்டியில் பயணிப்பது தொடர்பான மோதலில், ரெயில்வே பாதுகாப்புப் படை போலீசை கத்தியால் குத்திய, நடிகை அந்தரா பானர்ஜியை, போலீசார் கைது செய்தனர். மஹாராஷ்டிரா மாநிலம் தானேயைச் சேர்ந்தவர், 'வெப் சீரிஸ்' எனப்படும் இணையதள டிவி தொடரில் நடிக்கும் நடிகை அந்த்ரா பானர்ஜி, இவர் கடந்த 12ல் குஜராத் மாநிலம் சூரத்துக்கு ஆரவல்லி எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்றார். நடிகை அந்த்ரா கைது துாங்கும் வசதி கொண்ட பெட்டிக்கு முன்பதிவு செய்த அவர், ஏசி பெட்டியில் பயணித்தார். இது தொடர்பாக அந்த சீட்டை முன்பதிவு செய்தவருக்கும் நடிகைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதை விசாரிக்க வந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் எஸ்.ஐ., யாமினி காந்த் மிஸ்ராவுடன் தகராறு ஏற்பட்டது. அப்போது கத்தியால் அவரைக் குத்தியதால், நடிகை அந்த்ரா கைது செய்யப்பட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/actress-arrested-for-stabbing-railway-policeman



