பாரிஸ், ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின் மற்றும் பிரான்சில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட், அவிலா, குவாதலஹாரா உள்ளிட்ட நகரங்களில் காட்டுத்தீ பரவி வருகிறது. அதேபோல், பிரான்சில் கேப் பிரெட், பிஸ்காரொஸ், கிரோண்டி, லெண்டிஸ், பிரொடொக்ஸ் போன்ற நகரங்களிலும் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. காட்டுத்தீயால் ஸ்பெயினில் 13 பேர், பிரான்சில் 2 பேர் என மொத்தம் 15 பேர் உயிரிழந்துள்ளனர். காட்டுத்தீயை கட்டுப்படுத்த ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர்கள், விமானங்கள் மூலமும் காட்டுத்தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 2.70 லட்சம் பேர் பாதிப்பு இந்நிலையில், காட்டுத்தீயால் பிரான்ஸ், ஸ்பெயினில் 2 லட்சத்து 70 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களிலும் வேறு நகரங்களிலும் தங்கியுள்ளனர். காட்டுத்தீயை கட்டுப்படுத்த ஸ்பெயின், பிரான்ஸ் அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/world/wildfires-in-spain-and-france-displace-270000-people




