மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் கமிஷனராக இருக்கும் துகாராம் முண்டே என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி மாநிலம் முழுவதும் பால் கலப்படத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்தார். தற்போது மாநிலம் முழுவதும் உள்ள உணவகங்களில் சுத்தம் மற்றும் உணவு பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து ரெய்டு நடத்தி வருகிறார். துகாராம் முண்டே தலைமையிலான உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் அதிரடி நடவடிக்கைகளால் மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள உணவகங்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன. மும்பை ஐ.ஐ.டி உளாகத்தில் இருக்கும் இரண்டு கேண்டீன்களுக்கு கூட இத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். மும்பை முழுவதும் உள்ள பிட்சா உணவகமான டோமினோஸ் பிட்சா கடைகளில் இப்போது அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். கடந்த 10 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட இந்த ரெய்டில் மாநிலத்தில் உள்ள நான்கு டோமினோஸ் பிட்சா விற்பனை நிலையங்களின் உரிமங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் மூன்று மும்பையில் அமைந்துள்ளன. ஜூபிலியன்ட் புட்வொர்க்ஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் இந்த விற்பனை நிலையங்களில், பல உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிமீறல்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் விலே பார்லே (மேற்கு), போரிவலி (மேற்கு) மற்றும் ஆர்-சிட்டி மால், காட்கோபர் (மேற்கு) ஆகிய மூன்று மும்பை விற்பனை நிலையங்களின் உரிமங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. மேலும், சதாராவின் கராட்டில் உள்ள டோமினோஸ் மல்காபூர் விற்பனை நிலையத்தின் வணிக உரிமமும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. இது தவிர உணவுப் பாதுகாப்பு ஆணையம் சதாராவின் கராட்டில் உள்ள ஷப்பிரே புட்ஸ் விற்பனை நிலையத்தின் உரிமத்தையும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது, இந்த நிறுவனம் இந்தியாவில் கே.எப்.சி., பிட்சா கட், போன்ற பிரபல உணவகங்களை நடத்தி வருகின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/trending/dominos-pizza-outlets-sealed-in-mumbai-for-violating-food-safety-regulations




