மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் அரசியல் தலையீடு இருப்பதாக அறங்காவலர் குழு குற்றம்சாட்டியது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை (வியாழக்கிழமை) நடக்க உள்ளது. இந்தநிலையில் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன், அறங்காவலர்கள் டாக்டர் சீனிவாசன், சுப்புலட்சுமி ஆகியோர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- உலகமே எதிர்பார்ப்பில் உள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக திருவிழாவை எந்தவித கருத்து வேறுபாடுகளுக்கும் இடம் கொடுக்காமல் ஒருமித்த கருத்துடன் அனைவரும் மகிழ்ச்சியாக நடத்திட வேண்டும் என நினைத்தோம். 2018-ம் ஆண்டு ஏற்பட்ட தீவிபத்துக்கு பிறகு மீண்டும் தொன்மை மாறாமல் கோவிலை புனரமைக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், அப்பணியை தொடங்கி வைத்த சில மாதங்களில் அப்போதைய அறங்காவலர் குழு தலைவர் கருமுத்து கண்ணன் மரணம் அடைந்தார். அழைப்பிதழில் பெயர் அதன் பிறகு அறங்காவலர் குழுவினராக நாங்கள் பொறுப்பேற்று கொண்ட பிறகு சவாலான இப்பணியை முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரிலும், முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் வழிகாட்டுதலின்படி சிறப்பாகவே செய்து வந்தோம். கும்பாபிேஷேக விழா அழைப்பிதழில் எங்களின் பெயர் புறக்கணிக்கப்பட்டு, அதனை கோர்ட்டு அறிவுறுத்தி பேசுபொருளானது. விழா சிறப்பாக நடைபெற வேண்டிய இந்த நேரத்தில் பக்தர்களின் பாதுகாப்பு, உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவற்றை தாண்டி முறையான வழிகாட்டு நெறிமுறைகள் அனைவரும் தெரிந்து கொள்ளும்படி வெளியிடப்பட்டு உள்ளதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஆனால் எங்களை எந்த செயல்பாட்டிலும் கலந்து ஆலோசிக்காமல், தன்னிச்சையாக அரசியல் தலையீடு கொண்டதாக கோவில் நிர்வாகத்தின் செயல்பாடுகள் உள்ளன. அனுமதி அட்டைகளை பொறுத்தவரை 9 ஆயிரம் எனவும், 11 ஆயிரம் என வும் தினமும் ஒரு தகவல் வெளிவருகிறது. அதிலும் நன்கொடைதாரர், உபய தாரர்களுக்கு இந்த அழைப்பு சென்று சேர்ந்துள்ளதா என எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. யாரெல்லாம் இதில் விடுபட்டுவிடக்கூடாது என்பதை பட்டியலாக நாங்கள் தயாரித்து வைத்துள்ள நிலையில் அதனை கோவில் நிர்வாகம் பொருட்படுத்தவில்லை. ஆன்மிக திருப்பணிகள் 1963-ம் ஆண்டு பி.டி.ராஜன் தலைமையில் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்று, மீனாட்சி அம்மனுக்கு வைரக்கிரீடம் சாற்றிய குடும்பத்தின் வழி வந்த எங்கள் குடும்பத்தில் என்றைக்குமே அரசியலையும், ஆன்மிகத்தையும் இணைத்து பார்த்ததில்லை. ஆன்மிக திருப்பணிகள் சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதில் கண்ணும் கருத்தாக இருக்கும் நாங்கள், அதில் அரசியல் கலந்துவிடக்கூடாது என்று கருதுகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 2,000 பாஸ்கள் இந்நிலையில் அறங்காவலர் குழு குற்றச்சாட்டுக்கு அமைச்சர் நிர்மல் குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அறங்காவலர்களின் செயல்பாடுகளை தடுக்கவில்லை. அறங்காவலர்களின் தேவை என்ன என அதிகாரிகள் மூலம் கேட்டறியப்படும். பாஸ் விவகாரங்களில் யாரும் தலையிடவில்லை. பக்தர்களுக்கு 2,000 பாஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வரும் வழிகளில் ஒத்திகை பார்க்கப்படுகிறது. பொதுப்பணித்துறையினரின் ஆய்வின் அடிப்படையில் நபர்கள் அனுமதிக்கப்படுவார்கள்” என்று அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/political-interference-in-meenakshi-amman-temple-consecration-ceremony-minister-denies-allegations-made-by-the-board-of-trustees




