இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'ராமாயணா' படத்தின் முதல் பாகத்தின் டிரெய்லர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது. இப்படத்தில் சூர்ப்பணகை கதாபாத்திரத்தில் நடிகை ரகுல் பிரீத் சிங் நடித்திருக்கிறார். Ramayana Trailer - Yash சமீபத்தில், எக்ஸ் தளத்தில் ரசிகர் ஒருவர் ரகுல் பிரீத் சிங்கிடம், "சூர்ப்பணகை போன்ற ஒரு கடினமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததற்குப் பாராட்டுகள்" எனக் குறிப்பிட்டு, இந்தச் சவாலான கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம் என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்தவர், "நான் சூர்ப்பணகை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்குக் காரணமே நீங்கள் குறிப்பிட்ட அந்தச் சிக்கலான தன்மைதான். வரலாற்றில் ஒரே ஒரு குறிப்பிட்ட சம்பவத்துக்காக மட்டுமே அவர் நினைவுகூரப்படுகிறார். ஆனால், அவருடைய கதைக்குப் பின்னால் அதைவிட நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ஒரு நடிகையாக, மக்களின் பார்வையை மாற்றக்கூடிய மற்றும் சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதுதான் எனக்கு மிகவும் உற்சாகமளிக்கிறது. Rakul Preet Singh|ரகுல் ப்ரீத் 'ராமாயணா' படம் திரைக்கு வரும்போது, ரசிகர்கள் அனைவரும் திறந்த மனதோடு இந்தச் சூர்ப்பணகை கதாபாத்திரத்தைப் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார். நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் 'ராமாயணா' திரைப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யஷ் ராவணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. Ramayana: "முழுமையான நேர்மையோடு அணுகுவதே எனது பொறுப்பாக இருந்தது" - ராமாயணா இயக்குநர் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://cinema.vikatan.com/bollywood/rakul-preet-singh-surpanakha-role-nitesh-tiwari-ramayana-reply




