முதல்-அமைச்சர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் ‘சிக்மா’ என்ற படத்தை இயக்கியுள்ளார். சந்தீப்கிஷன் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படம் ஜூலை 31ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. கொள்ளை சம்பவங்களை மையமாக கொண்டு இப்படம் தயாராகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஜேசன் சஞ்சய் கனடாவில் உள்ள டொராண்டோ பிலிம் ஸ்கூலில் திரைப்படத் தயாரிப்பு டிப்ளமோ படித்துள்ளார். தொடர்ந்து லண்டனில் திரைக்கதை எழுதுவது தொடர்பான பி.ஏ. ஹானர்ஸ் படித்துள்ளார். சில குறும்படங்களை இயக்கியுள்ளார். இயக்குனரான ஜேசன் சஞ்சய் விரைவில் கதாநாயகனாகவும் அறிமுகமாக இருக்கிறார். அவர் நடிக்க இருக்கும் புதிய படத்தை பிரபல தயாரிப்பாளர் ஜி.கே.எம்.தமிழ் குமரன் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஜேசன் சஞ்சய் இயக்கி உள்ள ‘சிக்மா’படம் ஜி.கே.எம். தமிழ்குமரன் தலைவராக இருக்கும் லைகா தயாரித்து உள்ளது. அடுத்ததாக ஜேசன் சஞ்சய் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கும் முதல் படத்தையும் தமிழ் தமிழ் குமரன் தயாரிக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. உலகில் உச்ச நடிகராக தமிழ் திரை உல வலம் வந்த விஜய் அரசியல் பயணத்தை தொடங்கியதும் சினிமாவில் இருந்து விலகினார். தொடர்ந்து நடந்த சட்டமன்ற தேர்தலில் அவரது தலைமையிலான த.வெ.க. அதிக இடங்களை பெற்று தமிழகத்தின் முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். அரசியல் பயணத்திற்காக சினிமாவில் இருந்து விலகிய முதல்-அமைச்சர் விஜய் நடித்த கடைசி படமான 'ஜனநாயகன்' வருகிற 24-ந்தேதி திரைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. தந்தை சினிமாவில் இருந்து விலகி உள்ள நிலையில் மகன் ஜேசன் சஞ்சய் கதாநாயகனாக அறிமுகமாக இருப்பது விஜய் ரசிகர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/sanjay-vijay-to-make-his-debut-as-a-hero




