காசு, பணத்தையெல்லாம் மறந்து, டிஜிட்டல் பேமென்ட்டுக்கு பெரும்பான்மையான இந்தியர்கள் மாறி பல காலமாகிவிட்டது. இந்த நேரத்தில், யுபிஐ பேமென்ட்டுகளுக்குக் கட்டணம் என்கிற பேச்சு எழுந்து, இந்திய மக்களிடம் ஒரு ‘ஜெர்க்’ஐ ஏற்படுத்தியுள்ளது. இந்த யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் என்பது குறித்து மத்திய அரசு அறிக்கை ஒன்றின் மூலம் விளக்கம் அளித்துள்ளது. நேற்று (செப்டம்பர் 14), மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, “2007-ஆம் ஆண்டின் செலுத்துதல் மற்றும் தீர்வு முறைகள் சட்டத்தின் பிரிவு 10A வழங்கும் அதிகாரங்களின் கீழ், > RuPay வழியிலான டெபிட் கார்டு பரிவர்த்தனைகள், நிதி அமைச்சகம் தெளிவுரைBRICS: ஒன்றுகூடிய இந்தியா, சீனா, ரஷ்யா; ட்ரம்பிற்கு சொல்லும் Lesson! De Dollarisation புது வடிவிலா? > ரூ. 2,000 வரையிலான யுபிஐ (UPI) பரிவர்த்தனைகள். இந்த இரண்டு வகையிலும் பணம் செலுத்துபவர் அல்லது பணத்தைப் பெறுபவர் மீது எந்தவொரு வங்கியோ அல்லது சேவை வழங்கும் அமைப்போ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவொரு கட்டணத்தையும் விதிக்கக் கூடாது.” இதனால், ரூ.2,000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் இல்லை என்பதில் ‘ஹேப்பி அண்ணாச்சி’யாக இருந்துகொள்ளலாம். இதற்கு மேலான பரிவர்த்தனைகளுக்குக் கட்டணங்கள் உண்டா என்பதற்கான எந்தத் தெளிவான விளக்கமும் இல்லை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/upi-payments-up-to-2000-remain-free-centre-clarifies




